கொச்சின் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

கொச்சின் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சின் புறப்பட்டு சென்றார்.

கேரளாவில் உள்ள மகாதேவர் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வலியுறுத்தி, 1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது. சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் நடைபெற்ற இப்போராட்டதை தந்தை பெரியார் முன்நடத்தினார்.  

இதையும் படிக்க : கோவை குடிநீர் பஞ்சத்திற்கு விரைவில் தீர்வு - கே. என்.நேரு!

இந்நிலையில் இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா வெற்றியைக் கொண்டாடும் வகையில், கேரளா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் இணைந்து, வைக்கமில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சின் புறப்பட்டு சென்றார்.  இதைத்தொடர்ந்து, இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார்.