சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து முதல்வர் முடிவெடுப்பார்...அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் ....!!

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து முதல்வர் முடிவெடுப்பார், என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து முதல்வர் முடிவெடுப்பார்...அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் ....!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் திமுக மாநில சிறுபான்மையினர் அணியின் சார்பில் மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு இஸ்லாமிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி சிறுபான்மை இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சட்டத்தில் திருத்தம் செய்து அவர்களை விடுவிக்க முடியாது விதிகளுக்கு உட்பட்டு தான் விடுதலை செய்ய முடியும் என கூறிய அவர், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.