மத்திய அரசு திட்டங்கள்... தமிழக மக்களுக்கு எதிரானது...! காங்கிரஸ் எம்.எல்.ஏ 

மத்திய அரசு திட்டங்கள்... தமிழக மக்களுக்கு எதிரானது...! காங்கிரஸ் எம்.எல்.ஏ 

மத்திய அரசு கொண்டு வருகின்ற திட்டங்கள் தமிழக மக்களுக்கு எதிரானது  என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  

நிலக்கரி சுரங்கம் அமைப்பது மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக இன்று சட்டப்  பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவரப்பட உள்ளது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  செல்வபெருந்தகை பேசும்போது "தமிழ்நட்டிற்கு மத்திய அரசு கொண்டு வருகின்ற திட்டங்கள் எல்லாம், எப்படி தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் என்பதற்கு இதுவாகும் ஒரு முன்னுதாரணம். நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டு அரசை கலந்து ஆலோசிக்கவில்லை. தமிழநாடு அரசின் அனுமதியும் பெறவில்லை. இந்த நடவடிக்கைகள் மாநில சுய ஆட்சியில் தலையிடுவதாக  உள்ளன. 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் -2020' அமலில் இருக்கும் போது ஒன்றிய அரசு  புதிய நிலக்கரி திட்டத்தை அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதிக்கும்  விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும் 33 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை விளைவிக்கும் பகுதி அது. ஆகவே புதுப்பிக்கத்தக்க எரி சக்திகளான கடல் அலை, சூரிய ஒளி போன்றவற்றை பயன்படுத்தாமல் நிலக்கரியை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்". என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்கு அரியாலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தஞ்சை மாவட்டம் குறிச்சிக்கோட்டை, பரவகோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 


புதிய நிலக்கரி சுரங்கம் பற்றி சட்டப்பேரவையில் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதனை ஒட்டி இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.