இந்திய பொருளாதார வரலாற்றின் இருண்ட காலம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்...

2020-ம் ஆண்டு இந்திய பொருளாதார வரலாற்றின் இருண்ட காலம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

இந்திய பொருளாதார வரலாற்றின் இருண்ட காலம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்...

சென்னை தியாகராய நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் எழுதிய  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ப. சிதம்பரம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து  நூல்களை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சமூதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக கூறினார். கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்திய பொருளாதாரம் சரிய தொடங்கிவிட்டதாக கூறிய அவர், 2020ம் ஆண்டு தான் இந்திய பொருளாதார வரலாற்றின் இருண்ட காலம் என விமர்சித்தார். மேலும் 30 சதவீத இளைஞர்கள் வேலை இழந்தும், வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருப்பதாகவும் ப.சிதமர்பரம் வேதனை தெரிவித்தார்.