ஏற்கனவே 50.. இப்போ மீதமுள்ள 50.. மொத்ததையும் விடுவித்த தமிழக அரசு!! எந்த கோடி தெரியுமா?

சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூபாய் 352 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே 50.. இப்போ மீதமுள்ள 50.. மொத்ததையும் விடுவித்த தமிழக அரசு!! எந்த கோடி தெரியுமா?

தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொகையில் எம்.எல்.ஏக்கள் தங்களு டைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். இந்நிலையில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூபாய் 352 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவிகிதத்தை ஏற்கனவே விடுவித்த நிலையில், தற்போது மீதமுள்ள 50 சதவிகித்தத்தையும் தமிழக அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.