கருமுட்டை விற்பனை விவகாரம்: இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பு - தமிழக அரசு!

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கருமுட்டை விற்பனை விவகாரம்: இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பு - தமிழக அரசு!

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைக்களுக்கு விற்ற வழக்கில், சிறுமியின் தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கருமுட்டை விற்பனை தொடர்பாக, சேலம் மற்றும் ஒசூர் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு போலீசார், 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களுடன் மருத்துவமனை நிர்வாகிகள் ஆஜராக அறிவுறுத்தியுள்ளனர்.  

இந்த நிலையில், இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்ட விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக 3 முதல்  8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் 5 முதல் 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.