நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் உயிரிழப்புக்கு தமிழக ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்" - விசிக. எம்.பி ரவிக்குமார்.

நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் உயிரிழப்புக்கு தமிழக ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்" -  விசிக.  எம்.பி ரவிக்குமார்.

நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் தற்கொலைக்கு தமிழக ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வரை கலந்து ஆலோசித்து வேறு ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் அவரது கட்சியின் நிர்வாகிகளோடு இன்றைய தினம் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில்,  இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு பெறுவதற்கு கடந்த 2001-ஆம் ஆண்டு வரையறை செய்தது போல், புதுச்சேரியில் வாழும் அனைத்து பட்டியல் சாதியினருக்கு 2001ஆம் ஆண்டு வரையறை செய்து இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.
 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்:- 

பிற பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் நடைமுறையை தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் பின்பற்ற வேண்டுமென வைத்த கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்ததைக்க குறிப்பிட்டு, மேலும் மத்திய அரசும், தமிழ்நாடு ஆளுநரும் நீட் தேர்வு தொடர்பாக மேற்கொண்டுள்ள மக்கள் விரோத நிலைப்பாட்டின் காரணமாக தமிழகத்தில் மகன் மற்றும் தந்தை ஆகிய இரண்டு உயிர்கள் பறிபோய் உள்ளதாகவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த அவர்,  நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதாகவும்,  நீட் தேர்வு விவகாரத்தில் மேலும் உயிர்கள் பறிபோகாமல் இருக்க வேண்டுமானால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர்களை நியமனம் செய்யும் போது அந்தந்த மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசித்து செய்ய வேண்டுமென பாஜக தங்களுடைய நிலைப்பாட்டை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாகவும், தற்போது அவர்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்களா என பாஜக தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவொத்த அவர் மேலும் தமிழ்நாடு முதலமைச்சரை கலந்து ஆலோசித்து வேறு ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க   | "மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் ஆளுநர்" உதயநிதி குற்றசாட்டு!