2018ல் கொல்லப்பட்ட மீனவர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!!!

2018ல் கொல்லப்பட்ட மீனவர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!!!

2018ம் ஆண்டு சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக மீனவ கிராமங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பத்து பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக இரு மீனவ கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.  அப்போது தேவனாம்பட்டின மீனவர்கள் அதிமுக பிரமுகர் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் காயமடைந்தனர். 

இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய தினகரன் என்பவர் விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார்.  இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு வழங்கினார்.  அதில் மோதலில் சம்பந்தப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்தார்.  

பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தகவல் அறிந்த குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியே நெஞ்சில் அடித்து கொண்டு அழுதபடி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க:  கருணைமிகு காவிரி காவலனே நீ வாழ்க... வாழ்த்தி பாடிய நாடக கலைஞர்!!!