"இந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்" உதயநிதி வலியுறுத்தல்!

"இந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்" உதயநிதி வலியுறுத்தல்!

"நியூ இந்தியா அஸ்யூரன்ஸின் இந்தி திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும்" என அமைச்சர் உதயயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும் பணியாற்றும் அனைவரும் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை விடுத்திருந்தது. இந்த சுற்றறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என அனுப்பிய சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும். இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும். இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது. தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்", என பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!