நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவருக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து

கோவை பொள்ளாச்சி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவரை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று வாழ்த்தினார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவருக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆத்து பொள்ளாச்சியில் வசிக்கும் பழங்குடியின முடுகர் இனத்தை  சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் தான் ராதாகிருஷ்ணன். தந்தையை இழந்த இவர், தாய் மற்றும் சகோதரருடன் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் நடந்த மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் சுமார் 16 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன் தன்னம்பிக்கையுடன் நீட்  தேர்வு எழுதினார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவில் 406 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவரை அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மாணவரின் கல்விக்கான உதவிகள் செய்துதரப்படும்  என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.