நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? இன்று மாலைக்குள் மெயில் போடுங்க...

நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இன்று மாலையுடன் முடிவடைகிறது. 

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? இன்று மாலைக்குள் மெயில் போடுங்க...

நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இன்று மாலையுடன் முடிவடைகிறது. 

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது. மேலும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று வரை 25 ஆயிரம்  மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வு வேண்டாம் என்றும், வேண்டும் என்றும், நடப்பாண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என பல கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் நீட் வேண்டாத் என்றே தெரிவித்து இருப்பதாக நேற்று நீதியரசர் ராஜன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு இன்று மாலையுடன் அவகாசம் முடிவடைய இருக்கிறது.

மேலும், இந்த ஆணையத்திற்கு அரசு ஒரு மாத காலம் காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதற்காக துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் தேவைப்பட்டால் காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நீட் தேர்வு குறித்த கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.