”ஊழல் பற்றி பேச பிரதமருக்கோ, பாஜகவிற்கோ அருகதை இல்லை” - முதலமைச்சர்

”ஊழல் பற்றி பேச பிரதமருக்கோ, பாஜகவிற்கோ அருகதை இல்லை” - முதலமைச்சர்

ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கோ, பாஜகவிற்கோ அருகதை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். 

திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து, மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்திய முதலமைச்சர், திருமண விழாவில் உரையாற்றினார். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்றியது போல், மக்களவை தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : புழல் சிறையில் வெளிநாட்டு கைதி தாக்கியதில் துணை ஜெயிலர் காயம்...! 

ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கோ, பாஜக-விற்கோ அருகதை இல்லை என சாடிய முதலமைச்சர், சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி ஆயுஷ்மான் பாரத் உள்பட 7 திட்டங்களில் மத்திய பாஜக அரசு ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான திமுகவின் கூட்டணி தொடரும் எனக் கூறிய முதலமைச்சர், இந்தியாவில் ஒரு நல்ல ஆட்சி அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.