15 பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு..!

15 பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு..!

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் முயற்சி மூலம் 15 பெண் குழந்தைகளின்.. விமானத்தில் பறக்கும் ஆசையை நிறைவேற்றி உள்ளது.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு

இந்தியா முழுவதும் ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்ற மாணவர்களின்.. விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  எஸ்.ஆர்.எஸ்  சர்வோதயா பெண்கள் விடுதியில்  உள்ள 15 மாணவர்களின் கனவான விமானத்தில் பறக்கும் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜி.டி.கார் மியூசியம்

சென்னை விமானநிலையத்தில் இருந்து இந்த 15 மாணவிகளும் விமானத்தில் கோவை அழைத்து செல்லப்பட்டு, அங்கு ஜி.டி.கார் மியூசியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் ரெசிடென்சி  நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு உயர்தர உணவு பரிமாறப்பட்டு பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உற்சாகமாக 15 மாணவிகளும் இந்த சுற்றுலாவை ரசித்துக் கொண்டாடினர்.

சென்னை வந்த விமான நிலையம்

பின்னர் மீண்டும் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிகழ்ச்சி மேலாளர் கிஷ்வர் ஜெஹான், இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயக்குனர் ஷரத்குமார்ஜி, சி.ஐ.எஸ்.எஃப் கமாண்டன்ட் ஸ்ரீராம் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினருக்கு 15 மாணவிகளும் புன்னகை நிறைந்த நன்றியை தெரிவித்தனர்.

ரவுண்ட் டேபிள் இந்தியா உறுப்பினர்கள்

ரவுண்ட் டேபிள் இந்தியாவின் டேபிளர்ஸ், விஜயராகவேந்திரா ஏரியா தலைவர், விபுல் ஜெயின், தலைவர் ஆர்.டி.100, ஜீதேந்திரா, தலைவர் ஆர்.டி.20 மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.