சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு - சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!

சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு - சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிக்காட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு என கூறினார். மேலும் சாலை விபத்துகளை குறைக்க உயர்மட்ட குழு கூடி ஆலோசித்து, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டதாக கூறிய அவர்,  இதன்மூலம் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுவருதாக குறிப்பிட்டார். இத்திட்டம் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 247 பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளதாக கூறிய ஸ்டாலின், இதன்மூலம் 33 ஆயிரம் பேர்  காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.