" அமலாக்கத்துறை நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

" அமலாக்கத்துறை நடவடிக்கை  சட்டத்திற்கு உட்பட்டு  நடக்கிறது "  - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

அமலாகத்துறை தன்னாட்சி அமைப்பு  என்பதால் அவர்களுக்கு கிடைக்கின்ற தகவலை வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், சட்டத்திற்கு உட்பட்டு அமலாகத்துறை  செயல்படுகிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அணி பிரிவுகள் சார்பில் பிரதமரின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்ள,  பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து கட்சி தொண்டர்களிடம் விளக்கினார். 

அதனைத் தொடர்ந்து,  அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை  குறித்து பேசிய அவர் அமலாகத்துறை தன்னாட்சி அமைப்பு என்பதால் அவர்களுக்கு கிடைக்கின்ற தகவலை வைத்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்றும் சட்டத்திற்கு உட்பட்டு தான் அமலாகத்துறை  செயல்படுகிறார்கள் என்றும்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பெருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க   | மேலும் ஒரு அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு சம்மன்!