”நான் CM ஆ இருந்தா நிச்சயமா செய்வேன்” காவலர்களை அதிரவிட்ட ஆட்டோ ஓட்டுநர்...!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நடைபெற்ற பொதுமக்கள் காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தனது கேள்விகளால் கமிஷ்னரை அலறவிட்ட ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையை அடுத்த ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை ஆவடி காவல் ஆணையரிடம் எடுத்துக் கூறி அதற்குரிய தீர்வுகளை காண வேண்டும் என்று கேட்டுகொண்டனர். 

கூட்டம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது குறையை கூற வந்த ஆட்டோ டிரைவரால் திருமண மண்டபமே ஆட்டம் கண்டது. தனது பேச்சை அதிரடியாகவே ஆரம்பித்த ஆட்டோ டிரைவர் விக்டர், பேச்சில் போகப் போக அனல் பறந்தது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் வேலைக்கு செல்பவர்கள் சென்று விட வேண்டும்.

இதையும் படிக்க : "தொழில்நுட்ப வளா்ச்சியால் நம்மை வளா்த்து கொள்ள வேண்டும்" - பிடிஆர்

அதற்கு பிறகு பள்ளிகளுக்கு செல்பவர்கள் சென்று விட வேண்டும் என ஆவடி காவல் ஆணையருக்கு அட்வைஸ் கூறிய ஆட்டோ டிரைவர் விக்டர், தற்போது மக்கள் தொகை ஜட்டு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது நான் கூறியபடி நீங்கள் செய்தால் தான் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும். முடிந்தால் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் இடம் பேசுங்கள். அந்த பவர் உங்களிடம் உள்ளது. எனக்கு அந்த பவர் இருந்திருந்தால் நானே பேசியிருப்பேன் என கெத்து காட்டினார். 

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நானும் ஒருவன். நான் CM ஆக இருந்திருந்தால், நிச்சயமாக நான் சொன்னதை செய்திருப்பேன். நான் CM ஆக பிறக்க வேண்டும் என எனக்கு ஆசையா இருக்கு.. ஏன்னா தமிழ்நாட்டில் அவ்ளோ பிரச்சனை இருக்கு எனக்கூறி அரங்கத்தையே அதிர வைத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அவரது மைக்கின் கனெக்சனை துண்டித்து விட்டனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் சென்று விட்டார். 

இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் கேட்டுக் கொண்ட ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதற்குரிய தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.