ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.... உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.... உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

கூடலூர் பகுதியில் உலவும் ஆட்கொல்லி புலியானது இதுவரை 4 மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த புலியை  சுட்டுக்கொல்ல அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவில், உரிய சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி ஆன்லைன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

அதில் அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.  வழக்கு இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், அதனை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு தெரிவித்துள்ளது.