அனைவருக்கும் கல்வி என்பதைவிட, அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும் - ஆளுநர்

அனைவருக்கும் கல்வி என்பதைவிட, அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும் - ஆளுநர்

அனைவருக்கும் கல்வி என்பதைவிட, கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 15 வது சர்வதேச இயந்திரக் கருவிகள் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

இதையும் படிக்க : கரையை கடக்கும் ’பிபோர்ஜாய்’...தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

அப்போது பேசிய அவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில்துறையின் காப்பாளனாக மாறியதாக கூறினார். 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட எரிசக்தி தேவையை இந்தியா பசுமை ஆற்றலாக உற்பத்தி செய்து இயற்கையை பாதுகாப்பதில் இந்திய அரசு முன்னோடியாகவும் இருந்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் கல்வி என்பதைவிட, கல்வி கற்கும் அனைவரும் அறிவுத்திறனுடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.