நியாயவிலைக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை..! என்ன காரணம்...?

நியாயவிலைக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை..! என்ன காரணம்...?

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பிஒ கருவிகள் நிறுவப்பெற்று பையோமெட்ரிக் முறை மூலம் கட்டுப்பாட்டுப் பொருட்களும் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாக டி. என் மக்கள் போர்டல் (TN People Portal) எனும் இணையதளத்தில் புகார்கள் பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனவே, வழங்கப்படாத பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புகார்களில் குறிப்பிட்டள்ள முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க : ஆளுநருடனான இபிஎஸ் சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன?!