போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும்...! - திருமாவளவன்

போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும்...! - திருமாவளவன்

போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும் என  விசிக வேண்டுகோளாக வைப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

"2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசிரியர்களுக்கு பணிநியமன போட்டித் தேர்விலிருந்து விலக்கு அளித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி  ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்". 

மேலும், " 4 ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆசிரியரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

இது குறித்து  திருமாவளவன் பேசுகையில், 

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பெற்றவர்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது , ஜனநாயகப்பூர்வமானது.

'இவர்கள் தொடர்ந்து பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தெருவில் நிற்கின்ற நிலையில் உள்ளனர். அரசாணை 149ஆல் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் யாரும் பணிக்கு சேர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாணை 149இல் இருந்து விளக்கு அளித்து சிறப்பு அரசாணை பிறப்பித்து இவர்களை நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்".

'முதல்வர் தீவிரமாக கருத்தில் கொண்டு இவர்களுக்கு வேலை வாய்ப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசு இவர்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும் ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும் அதை விசிக வேண்டுகோளாக வைக்கிறது", என்றார். 

முன்னதாக ஆசிரியர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன் "சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட நிலையில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பது அநீதி தான். முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது எங்கள் கடமை. அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர் வரை உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் சட்டமன்றத்தில் இதை தீவிரமாக கவனப்படுத்துவோம். 

இதையும் படிக்க     } ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை,... நேரடியாகப் பணியமர்த்த வேண்டும்..! - சீமான் வலியுறுத்தல்.

"கட்சியின் நிலைப்பாட்டிற்கும் ஆட்சியின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கும். இதற்கென்று சிறப்பு ஆணை பிறப்பித்து உங்கள் அனைவரையும் பணி நியமனம் செய்ய விசிக  வலியுறுத்துகிறது. அரசாணைகளின் காரணமாக முடிவெடுக்க முடியாத நிலையில் முதல்வர் இருப்பதாக நினைக்கிறோம். எங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மேற்கொண்டு போராட்டத்தை நடத்துவதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார்.

இதையும் படிக்க     } பல்கலைக்கழகத்தின் அலட்சியம்..! மாணவர்களின் மேல்படிப்பில் பாதிப்பு...! - மருத்துவர் இராமதாசு