பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை, காவலர்களே திருடி விற்றதால் பரபரப்பு!

கடலுர் மாவட்டம் பண்ருட்டியில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை, காவலர்களே திருடி விற்ற சம்பவம்  அதரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை, காவலர்களே திருடி விற்றதால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல் நிலையத்தில் இருந்த 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான போதைப் பொருட்களை, காவலர்களே திருடி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் அரவிந்தன் ஆகியோரை இடமாற்றம் செய்ததோடு, தலைமைக் காவலர் ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.