" பாஜக ஆட்சி செய்யும் இடங்களுக்கு அமலாக்கத்துறை செல்வதில்லை. அவர்கள் என்ன அரிசந்திரர்களா ?" - கே. எஸ். அழகிரி. 

" பாஜக ஆட்சி செய்யும் இடங்களுக்கு அமலாக்கத்துறை செல்வதில்லை.   அவர்கள் என்ன அரிசந்திரர்களா ?" - கே. எஸ். அழகிரி. 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தையே அமலாக்கத்துறை குறி வைக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

தென்சென்னை மத்திய மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாள் மற்றும்  இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்  வெற்றி விழா  இன்று கொண்டாடப்பட்டது. 

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி சிலை அருகே தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்திய ஒற்றுமை நடைபயணக் கொடியை 54 அடி கொண்ட கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்து ,  பின்னர் ராகுல் காந்தியின் புகைப்படம் கொண்ட பிறந்தநாள்  கேக்கையும் வெட்டி  கொண்டாடினர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்ஏல்ஏ கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, திருநாவுக்கரசு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மேடையில் கே.எஸ் அழகிரி பேசுகையில்:- 

ராகுல் காந்தி ஒரு தலைமுறையை மாற்றத்தின் புரட்சியாளர் என்று பாராட்டினார். அதோடு, தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்கிற இலக்கோடு, ஒரு புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு செயல்படுகிறார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவருடைய இந்திய நடை பயணம் அற்புதமாக இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.  

அதோடு, " மோடியினுடைய தத்துவம் சித்தாந்தம் வேறு, ராகுல் காந்தியினுடைய தத்துவம் சித்தாந்தம் வேறு, மோடி  ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவை பெயரால் மக்களைப் புரிந்து இந்த நாட்டை ஆளலாம் என்று நினைக்கிறார். ஆனால் ராகுல் காந்தி இமைகள் பெயரால் மக்களை ஒன்றிணைத்து இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார் ",  என கூறினார்.  

"  இது என்னுடைய கொள்கை;  நான் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மீது அதை திணிக்க மாட்டேன்; இந்துவா இரு அல்லது ராம பக்தரா இரு என்று கூற மாட்டேன்; நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; அது உன்னுடைய தனி உரிமை; என்னுடைய அரசாங்கம் என்பது மதத்தை சார்ந்திருக்காது ;நமக்கு மத நம்பிக்கை உண்டு ஆனால் அரசாங்கத்திற்கு மத நம்பிக்கை கிடையாது; மதத்தை யார் மேலும் திணிக்க கூடாது; அதுதான் மத சார்பின்மை " என காந்தி கூறியதை சுட்டிக்காட்டி  , காங்கிரஸ் அதைத்தான் பின்பற்றி வருகிறது என்று கூறினார். 

மேலும், " பிரதமர்  நரேந்திர மோடி நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு ஆதினங்கள் கால்களில் விழுந்து வணங்கி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு மதிப்பளித்தார்.  இதில் ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு பெண் என்பதற்காகவும், கணவனை இழந்த பெண் என்பதற்காக, மேலும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதற்காக குடியரசு தலைவரை அங்கு  அழைக்கவில்லை", என்று சாடினார். 

இதையும்  படிக்க     | "500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை" அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

அதோடு, " தலித்துகளை இந்துக்காளாக ஏற்று கொள்வதில்லை  என்றும், ' வருணாசிரம தர்மம் ஆரியத்தில் ஆரம்பித்து சூத்திரர்களில் முடிகிறது ' என்றும், அதில் தலித்துகள் இல்லை. அவர்களை புறக்கணித்து விட்டு நாடாளுமன்றத்தை திறக்கிறார்கள்"  என்றும் கூறினார்.  

இதையடுத்து, " உங்களுடைய அமலாக்கத்துறையை ஆந்திரா, ஹரியானா, உத்ரபிரதேஷம் போன்ற இடத்திற்கு ஏன் செல்லவில்லை?  எதிர்கட்சி ஆட்சி செய்யும் இடங்களுக்கு மட்டும் செல்கிறது. பாஜக ஆட்சி செய்யும் இடங்களுக்கு செல்வதில்லை அவர்கள் என்ன அரிசந்திரர்களா ? என கேள்வி எழுப்பினார். 

செந்தில் பாலாஜியை விசாரித்து கொள்ளுங்கள் , ஏன் நள்ளிரவில் விசாரிக்கிறீர்கள். இரவில் விசாரிப்பதற்கு அவர் என்ன தேசத்துரோகியா? முதலமைச்சர் ஸ்டாலின் ராகுலை பிரதமராக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மோடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்வதனால் அவர் மீது கோபம் வருகிறது. ஆகவே அவரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது" என்று கூறியவர், அமலாக்க துறை செய்வது அப்பட்டமான அரசியல்  என்று விமர்சித்தார். 

இதையும்  படிக்க     | கர்நாடகா : இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது...!