விநாயகா் சதுர்த்தி பண்டிகை; நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகா் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  மக்கள் காலையிலேயே தங்கள் வீடுகளில் விளக்கேற்றி விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை தொடங்குவர். அப்போது, அருகம்புல், பூ மாலை அணிவித்து, வாழை இலையில் தேங்காய், பழம், அவுல், பொாி, சுண்டல், சா்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடுவா். இதேபோல் கடைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விநாயகா் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் கூடும் பொதுவான இடத்தில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். 

அதன்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இதில், சென்னையில் மட்டும் 1,500 விநாயகா் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகள், மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது.

இதை முன்னிட்டு, நேற்று பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள், மலர்கள், மாலைகள் வாங்க கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை அலங்கரிக்க குடைகள், மாலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.  

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா