முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர்...

திருமங்கலம் மக்களின் நலன் கருதி செயல்படுத்த உள்ள திட்டத்தை அறிவித்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர்...

மதுரை திருமங்கலம் நகர் பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதை கண்டிக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும்., தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி உதயகுமார் இன்று திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில்,

திருமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள 27-வார்டுகளில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என ஐந்து மாத காலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்படைவதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.

திருமங்கலம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி மற்றும் இட ஒதுக்கீடு செய்து திட்டங்கள் அறிவித்தது அதிமுக அரசு, அந்த திட்டத்தை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் அறிவித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என் நேருவிற்கு திருமங்கலம் தொகுதி மக்கள் சார்பாக, மக்களின் நலன் கருதி செயல்படுத்த உள்ள திட்டத்தை அறிவித்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி எனக் கூறினார்.

மதுரையில் எதிர்கால தொலைநோக்கு திட்டங்களாக அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு 2023-ல் கொண்டுவர கூடிய திட்டங்களாக அமைச்சர்கள் பல்வேறு கூட்டங்களில் பேசுவது மற்றும் அறிக்கைவிடுவது எங்களுக்கு எந்த ஒரு வருத்தம் இல்லை. 

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை நீங்கள் மூடி மறைக்க முயற்சி எடுப்பது வானத்தை போர்வையால் போர்த்துவது போன்று., மதுரை மக்களின் வளர்ச்சிக்காக அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மூடி மறைக்க முடியாது என்று கூறினார்.