மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மூதாட்டியிடன் தங்க நகை அபேஸ் செய்த கும்பல் கைது....

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 60 வயது மூதாட்டியிடம் லாவகமாக பேசி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 6 சவரன் தங்க நகை கொள்ளையடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மூதாட்டியிடன் தங்க நகை அபேஸ் செய்த கும்பல் கைது....

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- திண்டிவனம் சாலை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு செல்வதற்காக, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே காத்துக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.  

அப்போது அந்த  வழியாக காரில் வந்த மூன்று நபர்கள், பேருந்திற்காக காத்திருந்த அலமேலுவிடம், நைசாக பேச்சுக்கொடுத்து, நாங்களும் மேல்மருவத்தூர் வழியாக தான் செல்கிறோம் எங்களுடம் காரில் வாருங்கள் என கூறி அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் காரில் இருந்த அலமேலுவிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர் அந்த கும்பல், அதை குளிர்பானம் என நினைத்து குடித்த மூதாட்டி அலமேலு சிறுது நேரத்திற்குள் மயக்கமடைய, அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி சரடு கம்பல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு மயங்கிய நிலையில் இருந்த அலமேலுவை திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சாலையில் விட்டுவிட்டுச் சென்றனர். 

மயக்கம் தெளிந்த மூதாட்டி அலமேலு அங்கிருந்தவர்களின் உதவியுடன் பெரிய பாளையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்தவற்றை கூறி அழுது புழம்பியவாறே புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கொண்ட கும்பல் மூதாட்டியை காரில் அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் கார் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வந்தவாசி மும்முனி புறவழி சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் மூதாட்டியிடம் நகை கொள்ளையடுத்து சென்றது இந்த மூன்று பேர் தான் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 50 வயது முதல் 60 வயது வரை உள்ள மூதாட்டி களை மட்டும் குறி வைத்து காரில் கடத்தி சென்று நகையை கொள்ளையடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரியவந்தது.மூன்று பேரரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த, 6 சவரன் தங்க நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.