ஆளுநர் தனது வேலையைக் கூட சரிவர செய்வதில்லை - டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்!

ஆளுநர்  தனது வேலையைக் கூட சரிவர செய்வதில்லை - டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் வேலையைக் கூட ஆளுநர் பார்ப்பதில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தல்:

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசு தலைவரிடம் அளிக்க உள்ளனர். இதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், ஆகியோர்  அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிக்க: 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால்...ஏலத்தில் விடப்படும்...போலீசார் எச்சரிக்கை!

ஆளுநர் தனது வேலையை கூட செய்வது இல்லை:

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன், பொதுவாக ஒரு ஆளுநர் என்பவர் மாநில அரசோடு இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசு செய்யும் தவறுகளையும், சட்ட விதிக்கு புறம்பாக செயல்பட்டால் அதனை எடுத்துக் கூறி அதனை சட்டபூர்வமாக கையாள வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் வேலையைக் கூட சரிவர செய்வதில்லை என்றும்,  ஆர்எஸ்எஸ் யின் கொள்கையை பரப்புபவராகவே செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.