”எங்கள் மாநாட்டின் தாக்கம் அனைத்து இடங்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” ஜெயக்குமார்!

”எங்கள் மாநாட்டின் தாக்கம் அனைத்து இடங்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” ஜெயக்குமார்!

எங்கள் செய்தியே வரக்கூடாது என திட்டமிட்டு இருபதாம் தேதி நீட் விவகாரத்திற்கு திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகளை சென்னை ராயபுரம் புதிய மேம்பாலம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராயபுரத்தில் இருந்து செல்லும் 5 பேருந்துகள், 10க்கும் மேற்பட்ட கார்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் மதுரை புறப்பட்டனர். 

இதையும் படிக்க : நேற்று நடந்தது மீனவர்கள் மாநாடு கிடையாது...மீனவர்கள் போர்வையில் நடந்த திமுக பொதுக்கூட்டம்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பது போல்.. (அதிமுக மாநாடு) எங்கள் செய்தியே வரக்கூடாது என திட்டமிட்டு இருபதாம் தேதி நீட் விவகாரத்திற்கு உண்ணாவிரத போராட்டத்தை திமுக நடத்துகிறது. நீட்டைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்தவித தகுதியும்; முகாந்திரமும் இல்லை.

எங்கள் மாநாடு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அதே நாளில் உண்ணாவிரதத்தை திமுக நடத்துகிறது; அதே நாளில் கட்சியே இல்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டுகிறார்; இறுதியில் இவர்கள்தான் குருடர்களாக இருப்பார்கள்; எங்கள் மாநாட்டின் தாக்கம் அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கும்; நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.