வங்ககடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது...

வங்ககடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்ககடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது...

வங்க கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி விட்டதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ்வு பகுதியானது உருவான தருணத்தில் ஆந்திரா கடல் பகுதிகள் அருகில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக செல்வதாக இருந்ததாகவும், 2 நாட்கள் முன் வட தமிழ்நாடு நோக்கி நகர்ந்ததாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கரைக்கு வரும் போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.  

நேற்று வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறாது என வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் தற்போது வலுப்பெற்றுள்ளது.தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு  திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.