திருச்சி முனியப்பசாமி கோவில் விழா.. ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற கோவில் திருவிழா!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரை முனியப்பசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற கோவில் திருவிழா நடைபெற்றது.

திருச்சி முனியப்பசாமி கோவில் விழா.. ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற கோவில் திருவிழா!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆணையூரில் கரை முனியப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு ஆடுகளை வாங்கி கோவிலுக்காக நேர்ந்து விடுவார்கள். புகழ்பெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவு கொடுக்கும் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

இதையடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து, ஆடுகளின் கறியை வெட்டி சமையல் செய்யும் பணி நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், கறி வெட்டுவது, சமைப்பது போன்ற அனைத்து பணிகளையும் ஆண்களே செய்தனர்.

இதன் பிறகு காலை சிறப்பு வழிபாடுகள் முடிந்த பிறகு ஆண்கள், சிறுவயது பெண் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் மட்டும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் சுண்டக்காம்பட்டி, ஆணையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணாக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பெண்கள் சுவாமியை வழிபட மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.