சாலையோரம் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்.. குடும்பத்துடன் சேர்த்து வைத்த காவல் துறை அதிகாரி!!

சாலையோரம் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைத்த மனிதநேயமிக்க காவல் துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சாலையோரம் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்.. குடும்பத்துடன் சேர்த்து வைத்த காவல் துறை அதிகாரி!!

சாலைகளை சீர் செய்து வரும் நபர்:

கடந்த சில நாட்களாகவே புரசைவாக்கம் தானா தெரு பகுதியில் 50 வயது தக்க நபர் ஒருவர் முகம் முழுவதும் பெயிண்டுகளை ஊற்றியவாறு அகோர நிலையில் சாலைகளை சீர் செய்வதும், அதேபோன்று சாலைகளில் இருக்கக்கூடிய தடுப்புகளை கீழே தள்ளுவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

நபரின் தகவல்:

இதையடுத்து வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு அந்த நபரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது 10க்கும் மேற்பட்ட உடைகளை அணிந்து முகம் முழுவதும் பெயிண்டுகளை பூசி கொண்டு இருந்தார். அவருடைய பெயர் கருணாகரன் என்றும் புரசைவாக்கம் பகுதியில் இருக்க கூடிய குடும்பத்தினர் தன்னை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

குடும்பத்திடம் சேர்த்து வைத்த காவலர்:

உடனடியாக ஆய்வாளர் அவருடைய தலை முடியை முழுவதுமாக மழித்து அவர் அணிந்திருந்த பழைய துணிகளை அகற்றி குளிக்க வைத்து புதிதாக உடைகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அந்த நபர் தனக்கு தொப்பி வேண்டும் எனவும், அதேபோன்று கண்ணாடி வேண்டுமெனவும் கேட்டிருக்கிறார். அதையும் காவல் ஆய்வாளர் வாங்கி கொடுத்து, உணவுகளையும் வாங்கி கொடுத்து அவருடைய குடும்பத்திடம் சேர்த்து வைத்துள்ளார்.

பாராட்டுகளை பெற்று வரும் காவலர்:

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவவே அங்கு இருக்கக்கூடிய மக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலுவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.