பயணிகளுக்கு இலவச மினரல் வாட்டர் தொட்டி அமைத்து கொடுத்த மினி வேன் டிரைவர்...

மதுரை, ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பயணிகளுக்காக மானாமதுரையில் இலவசமாக மினரல் வாட்டர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

பயணிகளுக்கு இலவச மினரல் வாட்டர் தொட்டி அமைத்து கொடுத்த மினி வேன் டிரைவர்...

மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பயணிகளுக்காக மானாமதுரையில் இலவசமாக மினரல் வாட்டர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சேர்ந்த மினி வேன் டிரைவர் திருச்செல்வம். மதுரை/ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் எங்குமே குடிநீர் வசதி கிடையாது. வாகன ஓட்டிகள் பலரும் சாலையோர கடைகளில் காசு கொடுத்துதான் தண்ணீர் வாங்கி பருக வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க திருச்செல்வம் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் தல்லாகுளம் முனீஸ்வரர் ஆலயம் அருகே தனது சொந்த செலவில் மினரல் வாட்டர் தொட்டி அமைத்துள்ளார்.

நான்கு வழிச்சாலையில் பயணம் செய்யும் பயணிகள், வாகன ஓட்டிகள் தல்லாகுளம் முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டு செல்வது வழக்கம். எனவே அந்த இடத்தில் மினரல் வாட்டர் தொட்டியை இலவசமாக அமைத்துள்ளார். 8 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொட்டியில் தினசரி தண்ணீர் நிரப்ப அருகில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியிடம் மாததொகை செலுத்தியுள்ளார். தினசரி காலையில் தொட்டியில் தண்ணீர் நிரப்பபடுகிறது. திருச்செல்வத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டியுள்ளார்.