பள்ளத்தில் தேங்கிய மழைநீர்! நடந்து சென்ற முதியவர் தவறி விழுந்து பலி!!

சென்னை வில்லிவாக்கத்தில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில், நடந்து சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் 75 வயதான முதியவர் குமாரசாமி. வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மழைநீரால் சூழப்பட்டுள்ள சாலையில் இருந்த பள்ளத்தில் இடறி விழுந்துள்ளார். சாலையின் ஒரு பக்கம் ஒரு அடி உயரம் வரை மழை நீர் தேங்கி நின்றதால் முதியவர் குமாரசாமி தண்ணீரில் மூழ்கி, எழ முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் சடலம் தண்ணீரில் மிதக்கும் போது தான் அப்பகுதி மக்கள் கவனித்து, வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.