ஒண்ணு தொலைந்தால் வேறு, அதுவும் தொலைந்தால் மற்றொன்று : ஆட்சியரிடம் முகக்கவசங்களை காண்பித்த மூதாட்டி!

ஒரு முககவசம் தொலைந்தால் மற்றொன்று, அதுவும் தொலைந்தால் வேறு, அதுவும் தொலைந்தால் இன்னொன்று என மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி முகக்கவசங்களை காண்பித்த நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒண்ணு தொலைந்தால் வேறு, அதுவும் தொலைந்தால் மற்றொன்று  : ஆட்சியரிடம் முகக்கவசங்களை காண்பித்த மூதாட்டி!

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அப்போது கடைகாரர்களிடமும், பள்ளி மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.  

இதைத்தொடர்ந்து பேருந்தில் ஏறி பயணிகளிடம் முகக் கவசங்கள் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய போது மூதாட்டி ஒருவர் தன்னிடம் நிறைய முக கவசங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு முககவசம் தொலைந்தால் மற்றொன்று அதுவும் தொலைந்தால் வேறு, அதுவும் தொலைந்தால் இன்னொன்று என  என ஆட்சியரிடம் முகக்கவசங்களை காண்பித்ட மூதாட்டியால் பேருந்துக்குள் சிரிப்பலை ஏற்பட்டது.