செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்....

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியக் கொடியோடு ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்....

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடும்பலூர் சத்திரத்தில் ஆறுமுகம் என்ற நபர் ,கொடும்பாளூரில் அதிக விபத்துகள் ஏற்படுவதால் மேம்பாலம் அமைக்க கோரியும் நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த ஊழல்களை தண்டிக்க வேண்டும் என்றும் நாட்டிலுள்ள தவறான சட்ட திருத்தங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கூறி இன்று யாரும் பார்க்காத வண்ணம் அதிகாலையில்  செல்போன் கோபுரத்தில் ஏறி தேசியக்கொடியுடன் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் இதுபற்றி ஆறுமுகம் தொலைக்காட்சியிலும் ஆங்கில செய்தித் தாள்களிலும் தன் முகம் தெரிய வேண்டும் என்றும் தன்னுடைய பேட்டியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் அட்ராசிட்டி செய்தது அனைவரையும் வெறுப்படைய வைத்தது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எதற்கும் செவி சாய்க்காத அந்த நபர், மாவட்ட ஆட்சித் தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதியும் வந்தால் மட்டுமே தான் இறங்கி வருவேன் என்று அனைவருக்கும் ஷாக் அளித்தார்.

ஆறுமுகத்தின் தாய் தந்தையரையும் சகோதரரையும் ஒலிபெருக்கி மூலம் பேச வைத்தும் பலனளிக்காதது அனைத்து துறையினருக்கும் தலைவலியாக அமைந்தது. இறுதியில் நேரம் சென்று கொண்டே இருந்ததால் உணவருந்தாமல் இருந்ததாலும், நீர் அருந்தாமல் இருந்ததாலும், உடல்நிலை சோர்வடைந்த நிலையில் தானே இறங்கி வருவதாக கூறி இறங்கி வந்தார் ஆறுமுகம்.

இதற்கிடையில் இந்த செல்போன் கோபுரமானது திருச்சி மதுரை பைபாஸ் ரோட்டில் அருகில் இருந்ததால் அவ்வழியாக சென்ற வாகனங்களில் சென்றவர்கள் இக் காட்சியை ரசித்து சென்றனர். மேலும் இந்த செல்போன் கோபுரத்தில் இதோடு 4 முறை வேறு வேறு நபர்கள் உச்சிக்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கருணை பார்த்த காவல் துறைக்கும் வருவாய் துறைக்கும் கருணையே இல்லாமல் நீர் அருந்த கூட நேரம் இல்லாமல் அவ்விடத்தை விட்டு அகல விடாமல் அனைவரையும் ஆட்டி பார்த்துவிட்டார்.

இந்த செல்போன் கோபுரம் அருகே பாதுகாப்பு அரண் ஏதும் அமைக்காமல் இருப்பதும் இது போன்ற நபர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் இவர்களின் இச்செயல்களுக்கு  ஊக்குவிக்கிறதா என அங்கே குழுமியிருந்த சில சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.