"பெட்ரோல் குண்டு வீச்சு; திட்டமிட்டது அல்ல" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

ஆளுநர் மாளிகையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் திட்டமிட்டது இல்லை என்று தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருககிறார்.

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இதையும் படிக்க : மனைவியை தீர்த்துக் கட்டிய கணவன்...கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை...!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது திட்டமிட்டது அல்ல என்றார். இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று குற்றம்சாட்டினார். தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் தாங்களே பெட்ரோல் வெடிகுண்டு வீசும் சம்பவத்தை எப்படி அரங்கேற்றுவோம் எனவும்  அவர் கேள்வி எழுப்பினார்.