முழு ஊரடங்கு ...வெளியில் சுற்றுவோரை உறுதி மொழி எடுக்க வைத்த எச்சரித்து அனுப்பிய போலீஸ்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியில் வந்த நபர்களை காவல்துறையினர் உறுதி மொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

முழு ஊரடங்கு ...வெளியில் சுற்றுவோரை உறுதி மொழி எடுக்க வைத்த எச்சரித்து அனுப்பிய போலீஸ்.!

தமிழக அரசு இன்று ஒரு நாள் முழு ஊரங்கை அமல்படுத்தி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்று பரவலை தடுக்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதியிகளிலும் பால் கடை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற  கடைகள், அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றி வரும் நபர்களை கண்காணிக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர வாகங்களில் வந்தவர்களையும், வெளியில் நடமாடியவர்களையும் தடுத்து நிறுத்திய பெரியகுளம் போலீசார், அவர்களை உறுதி மொழி எடுக்க வைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.