போலீசாரை ஒரு வாரத்தில் விடுவிக்க வேண்டும்... டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு...

காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலீசாரை ஒரு வாரத்தில் விடுவிக்க வேண்டும்... டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு...

திருநெல்வேலியில் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ள அவர், காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை இடமாறுதல் வழங்கப்பட்டும், அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்ப தகுந்தது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவை தவிர, அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், டி. ஐ.ஜி.க்கள் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்படும் பணியிட மாறுதல் உட்பட எந்த உத்தரவுகளும் உடனடியாக அமல்படுத்தப்படுவது இல்லை என குற்றம் சாட்டியுள்ள சைலேந்திரபாபு, இடமாறுதல் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், கவனக்குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.