நாடாளுமன்ற தேர்தலில் தனது தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தனது தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தோ்தலில் தன் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தப்போவதாக தொிவித்த முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வம், செப்டம்பா் 3-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தொிவித்தாா். 

மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்ற நிலையில், சென்னை வேப்போியில் ஓ.பன்னீர்செல்வம், அவரால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்று பேசுகையில், தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நேரம் இது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் உண்மையான அதிமுக என்று மக்கள் தீர்ப்பு சொல்வார்கள் எனவும் தொிவித்தாா்.

இதையும் படிக்க : கச்ச தீவு விவகாரம்; "உண்மைக்கு மாறாக முதலமைச்சர்" எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வம் பேசுகையில், நாடாளுமன்ற தோ்தலில் தன் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தப்போவதாக தொிவித்த அவா், செப்டம்பா் 3-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினாா்.

தொண்டர்களுக்காக கொண்டு வந்த பொதுச்செயலாளர் பதவியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த இரண்டாவது தர்ம யுத்தத்தின் நோக்கம் என குறிப்பிட்ட ஓ.பன்னீா்செல்வம், அதிமுக-வை படுதோல்வி அடைய செய்ய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என சாடினாா்.