தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குத் தீர்வு காண வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குத் தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குத் தீர்வு காண வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கூற வேண்டாமா? என வினவியுள்ளார்.


இன்றைய ஆட்சியாளர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்களை ஒரு அஞ்சல் பெட்டி போலக் கருதுகின்றார்கள்  என குற்றம்சாட்டிய அவர், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இயற்றிய சட்டங்கள், ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஆனால், அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் மேற்கொள்ளாமல், நிறுத்தி  வைப்பதை ஏற்க முடியாது என்றும் வைகோ ஆவேசமாக தெரிவத்துள்ளார்.