தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான் - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான் - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி பாமக தான் என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இதனை குறிப்பிட்ட அவர், போதைப்பொருட்கள், மதுபழக்கம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் ஆகியன இளைஞர்களை சீரழித்து வருவதாகவும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தனி சட்டம்  கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் கருணாநிதி தனக்கு மிகவும் பிடித்த தலைவர் என புகழாரம் சூட்டினார்.  மேலும் தகுதியற்ற மருத்துவர்களை தடுக்க கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு வணிகமயமாக்கப்பட்டு விட்டதாக சாடிய அவர், நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேகதாது பிரச்சினை குறித்து பேசி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று போராடுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.