லூலு மார்க்கெட் விவகாரம்: "ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி... பெரு முதலாளிகளுக்கு துணை போகிறார்கள்" த. வெள்ளையன் காட்டம்!

லூலு மார்க்கெட் விவகாரம்: "ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி... பெரு முதலாளிகளுக்கு துணை போகிறார்கள்" த. வெள்ளையன் காட்டம்!

லூலு மார்க்கெட் விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருமே பெரும் முதலாளிகளுக்கு துணை போகிறார்கள் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவையின் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

லூலு மார்க்கெட்டிற்கு  தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகளை தடுத்து நிறுத்தி  வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கங்களின் சார்பில் இன்று கோவை லுலு மார்க்கெட்டை கண்டித்து  தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற வியாபரிகளை காவல்துறையினர் சென்னை சேப்பாக்கத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன், லூலூ மார்க்கெட் திறக்கப்பட்டதால் சிறு வணிகம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து அதை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளோம். கோவையில் இதை திறந்து வைத்ததே தமிழக அமைச்சர் தான். அந்நிய தயாரிப்புகள் நமக்கு தேவை இல்லை. உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தினாலே போதும். அதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

முதலில் லூலூ மார்க்கெட் குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது போல தோன்றும் அதனால் பாதிக்கப்பட்டு சிறு வணிகர்கள் தங்களது கடைகளை மூடிய பின்னர் லூலூ மார்க்கெட் காரர்கள் வைப்பது தான் விலை. இதனால், பொதுமக்கள் எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் என தெரிவித்தார்.

அதேபோல, தற்போது மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மக்களை இவ்வாறு கஷ்டப்படுத்த வேண்டும் என்பதுபோல இந்த அரசு செயல்படுகிறது என விமர்சித்த அவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருமே பெரும் முதலாளிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் துணை போகிறார்கள் எனக் கூறினார்.

அதனால், அண்ணல் காந்தி வழியில் போராடுவோம். லூலூ போன்ற பெரிய நிறுவங்களை வீழ்த்துவோம். இந்தப் போராட்டம் இன்றோடு நிற்காது. தொடர்ந்து லூலு மார்க்கெட்டை போன்ற பெரும் முதலாளிகளை வீழ்த்தும் வரை போராடுவோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:"நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோரை சஸ்பெண்ட் செய்வது பாஜகவின் பயத்தை காட்டுகிறது" தமிழக ஆம் ஆத்மி!