அரசு நிகழ்ச்சியில் மாணவர்களை வேலையில் அமர்த்திய பள்ளி நிர்வாகம்..! 

அரசு நிகழ்ச்சியில் மாணவர்களை வேலையில் அமர்த்திய பள்ளி நிர்வாகம்..! 

ராமநாதபுரம் அருகே அரசு நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகம் மாணவர்களை வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் "" நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டம் "" என்ற அரசு நிகழ்ச்சி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 

அப்போது 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அட்மிஷன் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் காலதாமதமாக 11:30 மணிக்கு வந்தார். 

அப்போது கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு டீ, பிஸ்கட் வழங்கும் வேலையில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தி உள்ளது. 

அரசு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் பலரை முகம் சுழிப்பை ஏற்படுத்தியது, அதோடு, இந்த பள்ளி நிர்வாகித்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தது வருகின்றனர். 

இதையும் படிக்க     | "பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.