நரிக்குறவப் பெண்ணின் பொருட்களை அள்ளிச் சென்ற ஊழியர்கள்... குழந்தையின் பாலுக்காக வண்டியின் பின்னால் ஓடிய பரிதாபம்...

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சாலையோரம் கைகுழந்தையுடன் அமர்ந்து இருந்த நரிக்குறவ பெண்ணின் உடமைகளை பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் கொண்டு சென்றார்கள். குழந்தைக்கு பால் உட்பட பொருட்கள் இருந்ததால் பேரூராட்சி வாகனத்தின் பின்னால் ஒரு கிலோமீட்டர் கெஞ்சி கூத்தாடிய ஓடிய தாய். பரிதாபத்துடன் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்.

நரிக்குறவப் பெண்ணின் பொருட்களை அள்ளிச் சென்ற ஊழியர்கள்... குழந்தையின் பாலுக்காக வண்டியின் பின்னால் ஓடிய பரிதாபம்...

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா தடை உத்தரவு விலக்கப்பட்ட அதன் பின்னர் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் சாலையோரம் பொருள்களை விற்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நரிக்குறவர் தாய் ஒருவர் சாலை ஓரம் பாசி ஊசி போன்ற பொருள்களை விற்று வந்துள்ளார். இதனை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது உடமைகளுடன் நரிக்குறவ தாய் தன் குழந்தைக்கு கொடுக்கும் பால் மற்றும் உணவுபொருட்கள் அதில் இருந்ததால் அதை தரும்படி கெஞ்சியப்படி பேரூராட்சி வாகனத்தின் பின்னால் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அதிகாரிகள் பின்னால் பதறி கொண்டு ஓடிய காட்சி காண்போரை பரிதாபத்திற்கு உள்ளாக்கியது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.