90'ஸ் கிட்ஸ்-க்கு வந்த சோதனை.. சேராத ராசியைக் குறிப்பிட்டு மணமகள் தேவை என போஸ்டர் ஒட்டிய இளைஞர்..!

மதுரையில் மணப்பெண் தேவை என போஸ்டர் ஒட்டி பெண் தேடும் வாலிபரின் செயல் 90s கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

90'ஸ் கிட்ஸ்-க்கு வந்த சோதனை.. சேராத ராசியைக் குறிப்பிட்டு மணமகள் தேவை  என போஸ்டர் ஒட்டிய இளைஞர்..!

மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான சுவரொட்டிகள், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் போஸ்டர்கள் எப்போதும் பேசுபொருளாகி வருவது வழக்கம்.

இந்த நிலையில் மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற வாலிபர் மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் கொண்டிருந்த நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாதா விரக்தியில் மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.

ஏற்கனவே 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வருவதால் பல 90s கிட்ஸ்க்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில்., தற்போது நூதனமுறையில் மணமகள் தேவை என்று இந்த வாலிபர் செயல் 90 கிட்ஸ் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது