'பட்டியலின மக்கள் பயன்படுத்திய பாதையில் திடீரென முளைத்த சுவர்' தீண்டாமை சுவரா?

'பட்டியலின மக்கள் பயன்படுத்திய பாதையில் திடீரென முளைத்த சுவர்' தீண்டாமை சுவரா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பட்டியலின மக்கள் கடந்த-20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த  வழித்தடத்தை தடுக்கும் விதமாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சுவர் எழுப்பியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பட்டியலின மக்கள் சென்று வந்த வழித்தடத்தை அதே கிராமத்தில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பட்டியலின மக்கள் நடந்து செல்லும் வழி பாதையை தடுத்து நிறுத்தும் விதமாக தடுப்பு சுவர் கட்டி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டுமென்றாலும் இந்த வழித்தடத்தையே கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 'பட்டியலின மக்கள் மாற்று சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லக்கூடாது' என இந்த தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும், பட்டியல் இன  மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழித்தடத்தில் சென்றால் தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி மன்ற ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றிற்கு இந்த வழித்தடத்தை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் இந்த வழித்தடத்தில் செல்லாமல் மாற்றுவழித் தடத்தில் சென்றால் வெகுதூரம் சுற்றி சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையில் இந்த சுவர் எழுப்பப் பட்டுள்ளதாகவும் இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இது ஒரு தீண்டாமை சுவர் போல் உள்ளதால் உடனடியாக  இந்த சுவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி சார்ந்த  200க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கல்வராயன் மலையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமான சூழலும் நிலவி வருவதால் அசம்பாவிதங்களை நடைபெறாமல் இருக்க கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்

இதையும் படிக்க:இது தக்காளிக்காக சேர்ந்த கூட்டம்!