நிர்வாக போட்டியால் திறக்கப்படாமல் இருக்கும் திருமண மண்டபம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நிர்வாகப் போட்டியின் காரணமாக திறக்கப்படாமல் இருக்கும் திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்வாக போட்டியால் திறக்கப்படாமல் இருக்கும் திருமண மண்டபம்

ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் ஊராட்சி மன்றம் பருத்தியப்பர் கோவில் அருகே கடந்த அதிமுக ஆட்சி ஆட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது .

கடந்த ஆண்டு திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மண்டபத்தை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. நிர்வாக போட்டி காரணமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாகவும், ஊரின் முக்கிய பிரமுகர்கள் சார்பாகவும், ஊராட்சி ஒன்றிய ஆணையம் சார்பாகவும் மூன்று பூட்டுகள் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு திருமணம் நடத்த முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், நிர்வாக போட்டி காரணமாக பொதுமக்கள் வதைக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு திருமண மண்டபத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.