அப்போ ஒரு கொள்கை.. இப்போ ஒரு கொள்கை.. "இரட்டை வேடம் போடும் திமுக" - ஓபிஎஸ் விமர்சனம்!!

சொத்து வரியை உயர்த்தி ஏழை-எளிய மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போ ஒரு கொள்கை.. இப்போ ஒரு கொள்கை.. "இரட்டை வேடம் போடும் திமுக" - ஓபிஎஸ் விமர்சனம்!!

இதுகுறித்து அதிமுக தலைமை சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் இல்லாத போது ஒரு கொள்கை, ஆட்சியில் இருக்கும் போது ஒரு கொள்கை என அனைத்திலும் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு இன்னலுக்கு உள்ளாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்.

குடிநீர் வரி என்பது மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், திமுக அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு, குடிநீர் வரி உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வரி உயர்வு காரணமாக சொந்த கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அங்கு வாடகைக்கு தங்கியிருக்கும் ஏழை, எளியோரிடம் வாடகையினை உயர்த்தக்கூடிய நிலை ஏற்படும் என்றும்.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்து வரி உயர்வினை முதலமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழை-எளிய மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வினை திரும்ப பெறாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.