முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தில் அங்காங்கே விரிசல்...? மக்கள் அவதி.

முதல்வர் திறந்து வைத்த கட்டடத்தில் அங்காங்கே  விரிசல்...?  மக்கள் அவதி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே  புதிதாக கட்டி முதல்வர் திறந்து வைத்த வேளாண் பதப்படுத்தும் மைய கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நபார்டு திட்டம் மற்றும் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் முதன்மை பதப்படுத்தும் மையம் ரூபாய் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில் கடந்த ஒரு வருடமாக கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த முதன்மை பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்சாதன இயந்திரங்கள் மூலம் பதப்படுத்தி வைக்கவும் தேவையான நேரத்தில் அதனை எடுத்து விற்பனை செய்யவும் இந்த பதப்படுத்தும் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனைடவர்.

இந்நிலையில்,  இன்று இந்த கட்டடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை,  ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் சுங்குவார்சத்திரத்தில்  பதப்படுத்தும் மையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறிருக்க, ரூபாய் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த முதன்மை பதப்படுத்தும் மைய கட்டிடம் முழுவதும் அதாவது தரை, சுவர் , ஜன்னல் பகுதி என ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அந்த கட்டத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க   | பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி...வெளிநடப்பு செய்த பாமக எம்.எல்.ஏக்கள்!