தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை- பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை- பாஜக தலைவர் அண்ணாமலை

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,மகாகவி பாரதியார்  பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக அறிவித்து 37 லட்சம் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் என்ன கூறுவதென்று தெரியாமல் கூறுகின்றார்..இதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக ஐ.ஏ.எஸ், ஐ.பி. எஸ் அதிகாரிகள் பணி புரிந்துள்ளனர் என்றும் முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் 5 ஆண்டு பணி முடிந்த பின் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்றார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமத்தில் கூறுவது போன்று கே.எஸ். அழகிரி செய்து கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

மேலும் அதிமுகவுடன் பாஜக உறவு அண்ணன் தம்பி போல் உள்ளது என்றும் முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ் யின் மனைவி இறந்த துக்க் விசயம் கேள்விப்பட்டு அவரது இல்லத்திற்கு மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் சென்று வந்தார் என கூறினார்.