வாயில் வந்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய அமைச்சர்...

வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை பேசிக்கொண்டு இவர்களை எல்லாம் நாங்கள் கவலைப்பட்டு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

வாயில் வந்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய அமைச்சர்...

பா.ஜ.க. ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் என்பவர் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தை வைத்து காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்தார். இதனை தொடர்ந்து புகாரின் பேரில் சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸை போலீசார் கைது செய்தனர். 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழக போலீசார் தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறார்கள். அவர்கள் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் இல்லை. சைலேந்திரபாபு காவல் உயர் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார். எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். நாட்டிற்கே முன்மாதிரி இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களிடம் பேட்டிளித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக டி.ஜி. பி சைலேந்திரபாபுவை பாராட்டினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறார். சைலேந்திரபாபு எடுத்துக்காட்டு லஞ்ச, லாவண்யங்களுக்கு அப்பாற்பட்டு தீவிரவாதம், மதவாதத்திற்கு இடம் தராத வகையில் செயலாற்றக்கூடிய வகையில் திறன் படைத்தவர் சைலேந்திரபாபு. பல்வேறு தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகிறார். இப்படிபட்ட ஒரு காவல்துறை தலைவரை தமிழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். 

டி.ஜி.பி சைலேந்திரபாபு மீது குறைகள் ஏதும் கூற முடியாத ஒரு சிலர் தங்களை அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை பேசிக்கொண்டு இவர்களை எல்லாம் நாங்கள் கவலைப்பட்டு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.